'தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முருகன்': வெளியானது கடைசி விவசாயி டிரெய்லர்

கடைசி விவசாயி படத்தின் டிரெய்லர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானது. 

இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் அவர். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.

இதையும் படிக்கமணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படங்கள் எப்பொழுது வெளியீடு?

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ளார் மணிகண்டன். முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் ஏற்று நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்த நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களால் அவர் விலகினார். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>