‘தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றக்கூடாது’: சசிகலா வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றக்கூடாது என ஜெயலலிதாவின் தோழி சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

2022-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்ற முயற்சிப்பதாக அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிக்க | கேரளத்தில் மார்க்சிஸ்ட் பகுதிக்குழு செயலாளர் கொலை: ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு

இந்நிலையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்ப்புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே ஏதாவது ஒரு அதிகாரம் மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | வங்கக் கடலில் உருவானது ஜாவத் புயல்!

மேலும் இதுபோன்ற மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு தங்கள் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழிவகை செய்தாலே போதும், அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>