''தமிழ் சினிமாவுக்கு கிடைத்த…'': மாநாடு படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சொன்ன கருத்து

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடத்தில் நடித்திருந்த மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வசூலையும் வாரி குவித்து வருகிறது. 

இந்தப் படத்தை பாராட்டி பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இயக்குநர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் இயக்கத்தில் மாநாடு உருவாகியிருக்கிறது. சிலம்பரசன் கலக்கியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். 

இதையும் படிக்க | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கனவுப் பட டீசர் வெளியானது : மக்கள் நெகிழ்ச்சி

யுவனின் இசை படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பானவற்றை வழங்கியிருக்கிறார்கள். டைம் லூப் கதை நன்றாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த காட்சி அனுபவ திரைப்படம் இந்த மாநாடு என்று புகழ்ந்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>