தம்பியை நடிகராக அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அவரது படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அவரது படங்கள் வித்தியாசமாகவும் இருப்பதால் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. 

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘காடன்’ திரைப்படம் ரசிகர்களைக் கவரத் தவறியது. தற்போது அவரது படமான ‘எஃப்ஐஆர்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. 

இதையும் படிக்க | பனாமா பேப்பர்ஸ்: ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தம்பி ருத்ராவை நடிகராக அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், அதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், யாரிடமாவது நல்ல கதைகள் இருந்தால் தன்னை அனுகலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>