தாதா சாகேப் பால்கே விருது: நடிகர் ரஜினிகாந்த் நன்றி

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா தொற்று

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியின் நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருதை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சுட்டுரைப் பதிவில்,  “நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி” எனப் பதிவிட்டுள்ள தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>