தினேஷ் கார்த்திக் – தீபிகாவுக்கு இரட்டைக் குழந்தைகள்: பெயர்கள் அறிவிப்பு

 

தினேஷ் கார்த்திக் மற்றும்  தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

2015-ல் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவைத் திருமணம் செய்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி சமீபத்தில் சென்னைக்குத் திரும்பினார். காயம் காரணமாக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த தகவலை தினேஷ் கார்த்திக்கும் தீபிகாவும் சமூகவலைத்தளங்களில் அறிவித்து இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும் குழந்தைகளுக்கு கபிர் பல்லிகல் கார்த்திக், ஸியான் பல்லிகல் கார்த்திக் எனப் பெயரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>