திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதமான வகையில் கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து  பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் சுங்கத்துறை,வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா பரவல்: சீனாவில் மேலும் ஒரு மாகாணத்தில் பொதுமுடக்கம் அறிவிப்பு

இதில், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் இருவரும்,  தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து  இருவரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம், 1.57 கிலோ கிராம் எடையில் இருந்தது. அதன் மதிப்பு ரூ.76.80 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>