'திருமணத்துக்கு முன் நடந்த கடைசி படப்பிடிப்பில்… ': பூர்ணிமா பாக்யராஜ் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரது கணவர் பாக்யராஜுடன் மாலை அணிந்த படி இருக்கிறார். அவர்களுடன் நடிகர் பிரபு, விஜயகுமார், சாரு ஹாசன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 

அவரது பதிவில், ”இந்தப் படம் கடந்த 38 வருடங்களுக்கு முன் திருமணத்துக்கு முன் என்  நான் கடைசியாக பங்கேற்ற உங்க வீட்டு பிள்ளை படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின்போது நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாரு ஹாசன் உள்ளிட்டோருடன் பிப்ரவரி 4 1984 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஆண் கர்ப்பமானால்? பரபரப்பை ஏற்படுத்திய கணவருடன் ஜெனிலியா இணைந்து நடிக்கும் பட போஸ்டர்

நடிகர் பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதிக்கு சரண்யா, ஷாந்தனு என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சரண்யா பாரிஜாதம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாந்தனு தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நடித்து வருகிறார்.  
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>