திருமண நாளில் மறைந்த மனைவி குறித்து இயக்குநர் அருண்ராஜா உருக்கம்

பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சிறந்த விமர்சனங்களைப் பெற்ற கனா திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

இதனையடுத்து அருண்ராஜா தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஹிந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது. 

இதையும் படிக்க | மீண்டும் இணையும் ‘பருத்திவீரன்’ கூட்டணி: இயக்குநர் அமீரின் அடுத்தப் படம் அறிவிப்பு

கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அருண்ராஜாவின் மனைவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த நிகழ்வு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் இயக்குநர் அருண்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ”திருமண நாள் வாழ்த்துகள் பாப்பி” என அழுகின்ற எமோஜியை பதிவு செய்துள்ளார். அவருக்கு பதிலளித்த இயக்குநர் ஜான் மகேந்திரன், ”இந்த பதிவுக்கு பின் இருக்கும் வலி… யாருக்குமே வரக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>