திரையுலகில் அடியெடுத்து வைக்கும் யூடியூப் பிரபலம் ரித்விக்: அதுவும் யார் படத்தில் தெரியுமா?

யூடியூப் மூலம் பிரபலமானவர் ரித்விக். மிகச் சிறிய வயதில் ஆண், பெண், வயது முதியவர், இளைஞர் என அனைத்து தோற்றங்களிலும் அசத்தி வருகிறார். 5 வயதே ஆன ரித்விக் கதாப்பாத்திரங்களின் தன்மையை புரிந்துகொண்டு மிகச் சிறப்பான நடிப்பை வழங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது விடியோக்களை பார்க்கும் பெரும்பாலானோர் அவரை விரைவில் திரைப்படங்களில் காணலாம் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது அது உண்மையாகியிருக்கிறது. தற்போது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ரித்விக் நடிக்கவிருக்கிறாராம்.

இதையும் படிக்க | ‘புஷ்பா’ ஊ சொல்றியா பாடல்: விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா பதில்

இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஜி.கே.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>