திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா: கேக் வெட்டிக் கொண்டாட்டம்

பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா. ஆனால் அவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் முதலில் திரைக்கு வந்தது. அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகையானார். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி உட்பட அனைவருடன் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெற்றிகளைக் குவித்து வருகிறார். ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிக்க | பாஜக மிரட்டுகிறது”: ஆன்டி இந்தியன் தயாரிப்பாளர் புகாரால் பரபரப்பு

இந்த நிலையில் த்ரிஷா நடித்து வெளியான மௌனம் பேசியதே வெளியாகி 19 வருடங்கள் ஆகிறது. அதாவது த்ரிஷா திரையுலகுக்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை அவர் கேக் வெட்டிக்கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த அவர், ”உனக்கு விடுமுறை தேவைப்படாத ஒரு வேலைக்கு செல் என ஒரு மேதை சொன்னார். நான் இப்பொழுது வரை விடுமுறையில் தான் இருக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கு, உங்களால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>