துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரஹானே நீக்கம்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 18 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்ககோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்

இந்திய அணி:

  1. விராட் கோலி (கேப்டன்)
  2. ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
  3. கேஎல் ராகுல்
  4. மயங்க் அகர்வால்
  5. சேத்தேஷ்வர் புஜாரா
  6. அஜின்க்யா ரஹானே
  7. ஷ்ரேயஸ் ஐயர்
  8. ஹனுமா விஹாரி
  9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
  10. ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்)
  11. ஆர் அஸ்வின்
  12. ஜெயந்த் யாதவ்
  13. இஷாந்த் சர்மா
  14. முகமது ஷமி
  15. உமேஷ் யாதவ்
  16. ஜாஸ்பிரீத் பும்ரா
  17. ஷர்துல் தாக்குர்
  18. முகமது சிராஜ்

தயார் நிலை வீரர்கள்:

  1. நவ்தீப் சைனி
  2. சௌரப் குமார்
  3. தீபக் சஹார்
  4. அர்சான் நாக்வஸ்வாலா

ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெஸ்ட் தொடர் அட்டவணை:

  1. முதல் டெஸ்ட் – டிசம்பர் 26-30, செஞ்சூரியன்
  2. இரண்டாவது டெஸ்ட் – ஜனவரி 3-7, ஜோகன்னஸ்பர்க்
  3. மூன்றாவது டெஸ்ட் – ஜனவரி 11-15, கேப்டௌன்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>