துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஹே சினாமிகா படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான நடிகையர் திலகம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனயைடுத்து அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஹே சினாமிகா தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. 

ஹே சினாமிகா படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடன இயக்குநர்களில் இருந்து இயக்குநர்களான பிரபு தேவா, ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ் வரிசையில் பிருந்தா இடம் பிடித்துள்ளார். 

இதையும் படிக்க | ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கில் சூர்யா வேடத்தில் நடிக்கப்போவது இவரா ? உறுதியான தகவல்

காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்தப் படத்தில் யோகி பாபு, நட்சத்திரா, மிர்ச்சி விஜய், தாபா, கௌசிக், அபிஷேக் குமார், பிரதீப் விஜய், கோதண்ட ராமன், சங்கீதா, ஃபிராங்க் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் கதை திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியர் கார்கி எழுதியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>