தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று சனிக்கிழமை (டிச.4) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிக்க | பகல்பத்து: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(டிச.4) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிக்க | முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>