தெய்வ மகளுக்கு பிறகு மீண்டும் புதிய சன் டிவி தொடரில் களமிறங்கும் நடிகர்

 

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தத் தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் முறையாக ஒளிபரப்பான போது கிடைத்த அதே வரவேற்பு தற்போதும் கிடைத்து வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் சத்யா என்ற வேடத்தில் நடித்த வாணி போஜன் தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இதையும் படிக்க | ‘மாநாடு’ பட ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம் : சிம்பு வேடத்தில் இந்த ஹீரோ நடிக்கிறாரா ?

இந்த நிலையில் தெய்வமகள் தொடரில் கார்த்திக் என்ற வேடத்தில் நடித்த சுப்ரமணியன் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் எதிர் நீச்சல் என்ற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடர் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>