தெலுங்கு திணிப்பா?: புஷ்பா படத்துக்கு கர்நாடகத்தில் வலுக்கும் எதிர்ப்பு

அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா திரைப்படம் (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ஊ சொல்றியா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒரு சேர பெற்றுள்ளது. 

இதையும் படிக்க | ஜெயம் ரவியின் தவறான முடிவு?: வெளியான தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம்

இந்தப் படம் கர்நாடகத்தில் சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்தப் படத்தை கர்நாடகத்தில் ஸ்வாகத் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.   கர்நாடகத்தில் கன்னட மொழி மாற்றம் செய்யப்பட்டும், நேரடியாக தெலுங்கு மொழியிலும்  புஷ்பா வெளியாகிறது.

இந்த நிலையில் கன்னடத்தை விட தெலுங்கு மொழி பதிப்பே அதிக அளவில் வெளியாவதாக கன்னடத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக பாய்காட் புஷ்பா என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>