தெ..ஆ. சுற்றுப்பயணம்: 2-ம் நாளில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணி

 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் 2-வது நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணியை 297 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இந்திய ஏ அணி. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. பிருத்வி ஷா 42 ரன்களும் இஷான் கிஷன் 49 ரன்களும் எடுத்தார்கள். பாபா அபரஜித் டக் அவுட் ஆனார். விஹாரி 45 ரன்கள், சர்பராஸ் கான் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 99 ரன்கள் பின்தங்கியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>