தெ.ஆ. டெஸ்டில் பும்ராவுக்குக் காயம்: பிசிசிஐ

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. இன்று இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்ததால் 49 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி வருவதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இந்நிலையில் பும்ரா தனது 6-வது ஓவரை வீசியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. பந்துவீசி முடிக்கும்போது கால் இடறியதால் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>