தெ.ஆ. தொடர் தொடங்கியது: இந்திய ஏ அணியில் விளையாடும் தமிழக வீரர் (நேரலை விடியோ)

 

இந்தியா ஏ – தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது.  

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தெ.ஆ.-வின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய ஏ அணியில் டெஸ் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தெ.ஆ. ஏ அணி முதல் உணவு இடைவேளையின்போது 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>