தெ.ஆ. தொடர்: மும்பையில் 3 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள்

தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்காக மும்பை வந்த இந்திய அணி வீரர்கள், விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணி டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>