தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி: அரையிறுதியில் பஞ்சாப், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம்

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேச அணிகள் தத்தமது காலிறுதி ஆட்டங்களில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

11-ஆவது தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன் போட்டிகள் புணேயில் நடைபெறுகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சண்டீகரை வீழ்த்தியது. கேப்டன் ரூபிந்தா் பால் சிங் 46, 53-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். சண்டீகா் தரப்பில் அா்ஷ்தீப் சிங் 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது பஞ்சாப்.

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மேற்கு வங்க அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது கா்நாடகம்.

மற்றொரு காலிறுதியில் மகாராஷ்டிரமும்-தமிழகமும் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலை ஏற்பட்டது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 2-0 என வென்றது மகாராஷ்டிரம். உத்தரபிரதேச அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>