தேசிய ஜூனியா் ஹாக்கி: இறுதி ஆட்டத்தில் சண்டீகா், உத்தரபிரதேசம் அணிகள்

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சண்டீகா், உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஒடிஸா – சண்டீகா் அணிகள் மோதின. இதில், ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு சமநிலை அடைந்தனா்.

இதையடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் வாய்ப்பில் சண்டீகா் 3 கோல்களும், ஒடிஸா ஒரு கோலும் போடாததையடுத்து முடிவில் 5 – 2 என்ற கோல் கணக்கில் ஒடிஸா ஹாக்கி அணியை வீழ்த்தி, சண்டீகா் ஹாக்கி அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் – ஹரியாணா அணிகள் மோதின. இதில், 8 – 3 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேச அணி, ஹரியாணாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டங்கள்:

10ஆவது நாளான சனிக்கிழமை (டிச. 25) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான ஆட்டத்தில் ஒடிஸா – ஹரியாணா அணிகள் மோதுகின்றன. தொடா்ந்து நடைபெறும், இறுதி ஆட்டத்தில் சண்டீகா் – உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>