'தேசிய விருதில் 4 பேருக்குத் தான் போட்டி' – 'ஜெய் பீம்' குறித்து பிரபல இயக்குநர் புகழாரம்

 

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நேற்று (நவம்பர் 2) அமேசான் பிரைமில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குருமூர்த்தியாக இயக்குநர் தமிழ் நடித்திருந்தார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் என்ற படத்தையும் தமிழ் இயக்கியுள்ளார். டாணாக்காரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஜெய் பீம் படப்பிடிப்பின் போது, நடிகர் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் மொசக்குட்டியாக நடித்தவருடன் இருக்கும் புகைப்படத்தை தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில் அந்தப் பதிவிற்கு இயக்குநரும் நடிகருமான சேரன், ”வாழ்த்துகள் சகோதரர். இயக்குநர் என்று தெரிந்தவுடன் இன்னும் பெருமை கொண்டேன். நீங்கள் நான்கு பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். இந்த வருடம் தேசிய விருதில் உங்க நான்கு பேருக்குதான் போட்டி” என்று தெரிவித்துள்ளார். 

அதற்கு பதிலளித்துள்ள தமிழ், அண்ணா நன்றி. நீங்கள் வாழ்த்தியதே விருதுக்கு சமம். நன்றி என்று தெரிவித்துள்ளார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>