தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும்: வாட்ஸ்ஆப்

 

வாட்ஸ்ஆப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பயனர்களுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்ஆப் குறிப்பிட்டுள்ளது.

படிக்க  | முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்காலிக முடக்கம்

தமிழகம் உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.

இரவு 9.10 மணி முதல் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது.

முகநூல் விளக்கம்: 

எங்களது பயனர்கள் முகநூல் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோளாறை முடிந்தவரையில் விரைவாக சரி செய்ய முயன்று வருகிறோம். பயனர்களின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>