நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்த திமுகவின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இதையும் படிக்க |  நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள், வியூகம் மற்றும் பிரசார திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>