நக அழகுப் பராமரிப்பின் 100 ஆண்டுகால வரலாறு!

1920 களின் நக அழகுப் பராமரிப்பு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினீர்கள் என்றால் அப்போது நெயில் பாலிஷில் சிவப்பு நிறம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

சிவப்பு நிற நெயில் பாலீஷ்களை நீளமாக வளர்ந்த நகங்களில் மேல் முனைகளையும், கீழடிப் பாகத்தையும் பிறைச்சந்திர வடிவில் தோற்றம் தருமாறு இடைவெளி விட்டு அப்ளை செய்து கொள்வது அந்தக்கால வழக்கமாக இருந்திருக்கிறது.

இதை அப்போது மூன் மெனிக்யூர் என்ற பெயரில் குறிப்பிட்டார்கள். நெயில் பாலீஷில் வண்ணங்களைப் புகுத்தும் முறையை முதலில் கொண்டு வந்தவர் மிச்சல் மெனார்டு என்பவர்.

1930 களில் பெண்கள் நெயில் பாலீஷ் இட்டுக் கொள்ள விரும்பினார்கள் எனில்  பாதாம் பருப்பு வடிவில் நகங்களை கட் செய்து அவற்றில் சிவப்பு நிற நெயில் பாலீஷ் இட்டுக் கொண்டு நகங்களின் டிப்பில் சில்வர் நிற கோட்டிங் இட்டுக் கொள்வார்கள்.

இப்படி ஒரு ஃபேஷனை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ப்ரின்சஸ் டி ஃபாஸிக்னி லூசிஞ்சே எனும் பாரீஸைச் சேர்ந்த சமூகசேவகியே!

1937 ஆம் ஆண்டில் டப்பர் வேரைக் கண்டுபிடித்தவரான இயர்ல் டப்பர் என்பவர் நகங்களில் அணிந்து கொள்ள அல்லது பிணைத்துக்கொள்ளத் தக்கதான நெயில் ஆர்ணமெண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ட்ரா போலி நகங்களைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கினார்.

1940 களில் நீளமான சிவப்பு நிற நகங்கள் அல்லது குறுகிய ஓவல் ஷேப் கொண்ட சாஃப்ட் பிங் நிற நகங்கள் ட்ரெண்டிங்கில் இருந்தன.

அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் முதல் நடிகைகள் வரை பலரும் இதையே விரும்பினர். அந்நாளில் ரீட்டா ஹெய்வொர்த் என்பவர் தனது நீளமான நக வளர்ப்பு மற்றும் அடிக்கிற நிறத்திலான நெயில் பாலீஷ் உள்ளிட்ட விஷயங்களுக்காக மிகப்பெரிய பிரபலமாகக் கருதப்பட்டார்/ ஏனெனில் அந்தக் கால கட்டத்தில் பெண்கள் வீடு, அலுவலகம் எனப் பறந்து பறந்து வேலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருந்ததால் நீளமான நகங்களைப் பராமரிக்க முடியாமல் பெரும்பாலும் குறுகிய நகங்களையே பராமரித்து வந்தார்கள்.

1950 களில் அக்ரிலிக் நகங்கள் சிவப்பு, ஆரஞ்சு நிற நகங்கள், உறஞ்சுவது போன்ற உணர்வைத் தருவதான வண்ணங்கள் பிரபலமாக இருந்தன.

1955 ஆம் ஆண்டில் அக்ரிலிக் நகங்களை பல் மருத்துவரான ஃப்ரெட் ஸ்லாக் என்பவர் மெனிக்யூர் உலகில் முதல் முறை அறிமுகப்படுத்தினார்.

1960 களில் நேச்சுரல் வண்ணங்கள், பியர்லி பிங்க், பீச் நிறம் மற்றும் சதுர வடிவ நகப்பராமரிப்பு ஸ்டைல் ட்ரெண்டிங்கில் இருந்தது. இவ்வகை நகப்பராமரிப்பு ஸ்டைலுக்கு ஷெர் என்பவர் பிரபலமானவராக இருந்தார். ஏனெனில் தனது நகப்பராமரிப்பு ஸ்டைலிஸ்டிடம் ‘ஏதாவது வித்யாசமாக ட்ரை பண்ணுங்களேன் என்று கேட்டு இப்படியொரு ஸ்டைலை அவர் தான் முதன்முதலில் கண்டுபிடித்தார்.

1962 ல் முதன்முறையாக டயோர் (Dior) என்ற பெயரில் முறையான நகப்பராமரிப்பு ஸ்டுடியோ அறிமுகமானது.

1970 ல் முதன்முறையாக ஃப்ரெஞ்ச் மெனிக்யூர் அறிமுகமானது. ஹாலிவுட்டில் மேலும் மேலும் அதிகமான வித்யாசமான நக அழகுப் பராமரிப்பு முறைகளின் தேவை இருந்தபடியால் ஜெஃப் பிங்க் ஓர்லி எனும் ஃப்ரெஞ்ச் மெனிக்யூர் முறையை   அறிமுகமானது.

1980 களில் நீளமான நகங்களில் நியான் கலர் நெயில் பாலீஷ் பூசிக் கொள்வது ட்ரெண்ட் ஆக இருந்தது. பாப் பாடகி மடோனா அடர்த்தியான நியான் நிற நெயில் பாலீஷ்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டார்.

1985 ல் லீ ப்ரெஷ் செயற்கை நகங்களை அறிமுகப்படுத்தினார்.

1990 களில் நெயில் ஆர்ட் அறிமுகமானது. குட்டையான நகங்களில் டார்க் நெயில் பாலிஷ் இட்டுக் கொள்வது ஸ்டைல் சிம்பலாகக் கருதப்பட்டது. மிஸ்ஸி எல்லியட் உள்ளிட்ட ஹிப் ஹாப் கலைஞர்களைப் பார்த்து நெயில் ஆர்ட் செய்து கொள்வது அப்போதைய ட்ரெண்ட் ஆக இருந்தது. லில் கிம் டாலர் ரஷீதுகளைக் கூட அக்ரிலிக் நெயில் ஆர்ட் முறையில் டிஸைன் செய்து நகங்களில் மாட்டிக் கொண்டார்.

பல்ப் ஃபிக்ஸன் நாவல்களில் இடம் பெற்ற உமா துர்மனின் நகங்களைப் பார்த்த பின் வேம்ப் எனப்படும் சேனல் நெயில் பாலீஷ்களுக்காக மெளசு கூடிப்போனது. அடர் ரத்தச் சிவப்பில் அறிமுகமானவை அந்த நெயில் பாலிஷ்கள்.

2000 மாவது ஆண்டுகளில் அறிமுகமான பியான்சஸ் கோல்டு மிங்ஸ் எனப்படும் நெயில் ஃபாயில்கள் மிகச்சிறந்த நக ஆபரணமாகச் செயல்பட்டது. தங்க நிறத்திலும், சில்வர் நிறத்திலுமான நகங்கள் ஃபாயில்களாகச் செய்யப்பட்டு நகங்களில் அணிந்து கொள்ளப்பட்டன.

2000 ரிசெஷன் காலங்களில் நெயில் ஆர்ட் மக்களின் கலக மனதை மறைபொருளாக வெளிப்படுத்தும் கலைகளாகச் செயல்பட்டன.

இன்றைக்கு மெனிக்யூரில் பலவிதமான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நெயில் ஆர்ட், ஆர்ட்டிஃபீசியல் நெய்ல்ஸ் தாண்டி நாம் விரும்பும் விதமாக எல்லாம் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தக்க விதத்தில் புத்தம் புதிய ட்ரெண்டுகள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் முதன்முதலில் நகப் பராமரிப்பு மற்றும் நக அழகு படுத்துதல் கலை உலகில் எப்படித் தோன்றியது அது எவ்விதமாகவெல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பார்க்கையில் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது இல்லையா?!

 
 

<!–

–>