நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் மற்றும் நாகர்ஜுனா ?

 

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். 

இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் ஆகிய மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை தபு, மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நடிகர் அஜித்தும் தபுவும் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | சிம்புவுக்கு கிடைத்த மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு

இந்த நிலையில் இந்தப் படத்தில் மோகன்லால் மற்றும் நாகர்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்த நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படம் வெளியான பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மங்காத்தா படத்தில் அர்ஜுன் வேடத்தில் முதலில் நாகர்ஜுனாதான் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக அர்ஜுன் நடித்தார். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>