நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 13 ஆம் தேதி என்பது வியாழக்கிழமை வருகிறது. நடிகர் அஜித் படங்கள் பொதுவாக வியாழக்கிழமை தான் வெளியாகின்றன. மேலும் அஜித் படங்கள் குறித்த தகவல்களும் வியாழக்கிழமை தான் வெளியிடப்படுகின்றன. இந்த சென்டிமென்ட் காரணமாக வலிமை திரைப்படமும் வியாழக்கிழமை வெளியாகவிருக்கிறது. 

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் ஓடக் கூடியது என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>