நடிகர் அஜித்தின் 'வலிமை' இரண்டாவது பாடல் குறித்து வெளியான தகவல்

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் கிலிம்ப்ஸ் விடியோ மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹூமா குரேஷ், சுமித்ரா, யோகி பாபு, புகழ், ராஜ் ஐயப்பா, அச்சுயந்த் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | வெளிப்படையாக காதலை அறிவித்த ‘அம்மன்’ சீரியல் ஜோடி: இருமாநிலங்களை இணைக்கும் பந்தம்

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய் பீம் படத்தின் கலை இயக்குநராக பணிபுரிந்த கே.கதிர் இந்தப் படத்திலும் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ப்ரமோ இன்று (டிசம்பர் 1) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்றும் முழு பாடல் நாளை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>