நடிகர் அஜித்துடன் குக் வித் கோமாளி புகழ் : வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்தப் படம் 2 மணி நேரம் 58 நமிடங்கள் ஓடக் கூடியது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்தப் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிக்க | பிக்பாஸிலிருந்து வெளியேறிய சஞ்சீவை ஜோடியாக சந்தித்த வருண் மற்றும் அக்சரா

இந்த நிலையில் நடிகர் அஜித்துடன் புகழ் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த புகழ் தனது திறமையால் வெள்ளித் திரையில் நுழைந்து நிறைய படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>