நடிகர் அர்ஜுனுக்கு கரோனா பாதிப்பு

 

பிரபல நடிகர் அர்ஜுன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

அனைவருக்கும் வணக்கம். நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிக்கொண்டு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் நலமுடன் உள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணிவதை மறக்கவேண்டாம் என்றார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சர்வைவர் என்கிற நிகழ்ச்சியைச் சமீபத்தில் தொகுத்து வழங்கினார் அர்ஜுன்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>