நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவிற்கு அச்சுறுத்தல்கள் எழுந்து வரும் நிலையில் சென்னையில் அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஜெய்பீம் திரைப்படமானது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாகக் கூறி நடிகர் சூர்யாவிற்கு எதிராக மிரட்டல்கள் எழுந்தன.

இதையும் படிக்க | ஜெய்பீம் ’செங்கேனி’ பார்வதி அம்மாவுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை வழங்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>