நடிகர் மகேஷ் பாபுவுக்கு கரோனா : தொடர்ந்து பாதிக்கப்படும் நட்சத்திரங்கள்: மக்கள் அதிர்ச்சி

 

நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் பெரும் அச்சுறதுத்தலை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் வைத்தியநாதன் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமானதாக அறிவித்திருந்தார். மேலும், நடிகர் அருண் விஜய், நடிகை மீனா ஆகியோர் தங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறைவான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிக்க | வலிமை வெளியீடு ஒத்திவைப்பு

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

”ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு வணக்கம். எல்லா பாதுககாப்பு நடைமுறைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகளே இருக்கின்றன. என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுவதையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>