நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

இதையும் படிக்க | ‘விக்ராந்த் ரோனா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சிறைதண்டனைக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடங்கி பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சசிகலாவை மையப்படுத்தி அதிமுகவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வி.கே.சசிகலா திங்கள்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

இதையும் படிக்க | திருச்சியில் அரியாற்றில் மேலும் இரு இடங்களில் உடைப்பு: போக்குவரத்து மாற்றம்

சமீபத்தில் உடல்நலக் குறைவால் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நலம் விசாரிப்பதற்கும், கலை உலகின் உயரிய விருதான தாதா சாகே பால்கே விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>