நடிகை கஜோலுக்கு கரோனா

மும்பை: நடிகை கஜோல் ஞாயிற்றுக்கிழமை தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டு வந்தபோது, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 

இந்நிலையில், 47 வயதான நடிகை கஜோல் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தனது மகள் நைசாவின் படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார். நோய்த் தொற்று காரணமாக தனது சிவந்த மூக்கை வெளியில் காட்ட மிகவும் சங்கடமாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

கஜோல் கடைசியாக 2021-இல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான “திரிபங்கா”வில் நடித்தார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>