நடிகை குறித்து அநாகரிகமாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரால் பரபரப்பு: வைரலாகும் விடியோ

 

தெலுங்கில் டிஜே டில்லு என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதாநாயகன், நாயகி உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

அப்போது டிரெய்லரை சுட்டிக்காட்டி, பத்திரிக்கையாளர் ஒருவர் நாயகன் சித்துவிடம், நடிகை நேகாவின் உடலில் எவ்வளவு மச்சம் இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நாயகன் சித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். 

இதையும் படிக்க | மறைந்த தம்பி புனித்துக்காக குரல் கொடுத்த அண்ணன் சிவ ராஜ்குமார்: ரசிகர்கள் உருக்கம்

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த விடியோவை பகிர்ந்த நடிகை நேகா ஷெட்டி, ”இந்த கேள்வி எதிர்பாராதவிதமானது. ஆனால் இந்த கேள்வி, அந்த பத்திரிகையாளர் தன் வாழ்வில் உள்ள பெண்களிடம் அவர் அளிக்கும் மரியாதையை காட்டுகிறது” என்று வருத்தமாக தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நேகாவிடம் மன்னிப்பு கேட்டார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>