நடிகை குஷ்புவுக்கு கரோனா

பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருவதாக அறிவித்திருப்பது திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு சளி தொந்தரவு இருந்தது. 

என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>