நடிகை திரிஷாவுக்கு கரோனா தொற்று

பிரபல திரைப்பட நடிகை திரிஷாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை திரிஷா. தமிழில் நடிகர்கள் விஜய், அஜித்குமார், ஆர்யா, சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா பரவல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப்பதிவில் அவர், தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கரோனாவால் பாதிக்கப்பட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

“இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும், எனது தடுப்பூசிகளால் நான் இன்று குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டும், முகக்கவசம் அணிந்தும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்புவேன் என்று நம்புகிறேன்” என நடிகை திரிஷா குறிப்பிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>