நயன்தாராவின் புகைப்படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் வருத்தம்: காரணம் இதுதான்

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக இருவரும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார்கள். 

சமீபத்தில் இருவரும் இணைந்து வெளியிட்ட ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேப் போல ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தையும் இவர்களே வாங்கி விருதுகளுக்கு அனுப்பி வருகின்றனர். 

இதையும் படிக்க | இந்த சின்னத்திரை நடிகைகளுக்கெல்லாம் குரல் கொடுப்பது இவரா? வைரலாகும் டப்பிங் பேசும் விடியோ

மேலும், நயன்தாரா நடிக்கும் கனெக்ட், கவின் நடிக்கும் ஊர் குருவி போன்ற படங்களை இருவரும் ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையில் நான் பிழை, டுடுடு போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து, பணிகளை விரைவில் முடித்து நீண்ட விடுமுறைக்காக காத்திருக்கிறேன். இவருடன் பயணம் செல்வது ஆவலுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதில் பே(bae) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய பே பாடல் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>