''நல்லபடியா செஞ்சு குடுங்க'' – நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை

 

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ், லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து டான் படத்தின் வண்ணம் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பார்த்து நல்லபடியா செஞ்சு கொடுங்க சகோ என்று கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிக்க | ”நடிகர் சத்யராஜ் முழு நலத்துடன் இருக்கிறார்”: சிபி தகவல்

டான் படத்திலிருந்து அனிருத் இசையில் ஜலபுலஜங்கு என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாக்டர் படத்துக்கு பிறகு இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>