'நவம்பர் 25 தான்டா தீபாவளி' – 'மாநாடு' படம் தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா அதிரடி கருத்து: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சிம்புவின் மாநாடு படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீடும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் வெளியீடு திடீரென வருகிற நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இதுகுறித்து விளக்கமளித்த மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,  யாருடனும் போட்டியில்லை எனவும், விநியோகிஸ்தர்கள் பாதிக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய முடிவை எடுத்ததாகவும் தனக்கு இந்தப் படத்தின் மேல் முழு நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிக்க | கூழாங்கல்: ஆஸ்கர் தேர்வும் ஆச்சர்யங்களும்!

இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை 5 நாட்களில் முடித்தேன். என்னுடைய நாடி நரம்பு, கழுத்து முதுகு, தொண்டை எல்லாம் வலி எடுத்தது. 10 நாட்களாவது ஓய்வு தேவை என என்னை நானே கெஞ்சிக்கேட்டுக்கொண்டேன். ஆனால் படத்தைப் பார்த்த போது, தீபாவளி நவம்பர் 25 தான்டா. என்று சொல்லத்தோன்றியது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>