நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கி சமந்தா அதிரடி

கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இருவரது பிரிவு குறித்து சில ஊடகங்கள் வதந்திகளை பரப்பின. விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து வெளியே வர அனுமதியங்கள் என சமந்தாவும் கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் வதந்திகள் தொடர்ந்தன. 

இந்த நிலையில் தன்னைப் பற்றிய வதந்திகள் பரப்பிய சில யூடியூப் பக்கங்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிக்க | விக்ரம், துருவ் நடிக்கும் மகான்: ஓடிடியில் நேரடி வெளியீடு?

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாகக் கூறி வெளியிட்ட பதிவில் இருவரும் நண்பர்களாக தொடர்வோம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கேற்ப சமந்தா, நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்காமல் வைத்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது அவரது சமூக வலைதளங்களில் இருந்து தனிப்பட்ட முறையில் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் சமந்தா நீக்கியுள்ளார். நாக சைதன்யாவின் குடும்பத்தினருடன் இருக்கும் படங்கள், நாக சைதன்யா மற்றும் நண்பர்களுடன் இருக்கும் படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றன. ஆனால் நாக சைதன்யா, சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>