நாட்டில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக உயர்வு

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி,

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை (டிச.31) ஆலோசனை

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 263 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 252 பேரும், குஜராத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், கேரளத்தில் 65 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 320 பேர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>