நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தொற்று பரவல் சூழலுக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88 பேரும், தில்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | காட்பாடி பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: 23 ரயில்கள் ரத்து

இவர்களைத் தவிர ஹரியாணா, ஒடிசா முறையே தலா 4 பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கம் முறையே தலா 3 பேரும், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் முறையே தலா 2 பேரும், சண்டிகர், லடாக், உத்தரகண்ட் முறையே தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 114 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>