'நான் பண்ணது தப்பா சார்?': 'மாநாடு' பிரபலத்திடம் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன் : என்ன நடந்தது ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் நடிகர் சிம்புவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ‘மாநாடு’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில், ”மாநாடு படம் வெற்றியடைய நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் காமாட்சி மற்றும் மாநாடு பட குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படத்தில் பணிபரிந்தவர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

”என்னை விட்டு விட்டீர்கள்’ என்பது போல நடிகர் பிரேம்ஜி, சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ”சார் நீங்களும் வெங்கட் பிரபு சாரும் ஒன்னு தான்னு நினச்சு உங்க பெயரை சேர்க்கவில்லை. இப்பொழுது சொல்லுங்கள். நான் பண்ணது தப்பா சார்? உங்களுக்கு வாழ்த்துகள்” என்று நக்கலாக பதிலளித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>