நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழும் தமிழ்ப் படம்

காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்தைப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி கவனம் அடைந்த இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம் – கடைசி விவசாயி.

விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். விவசாயி வேடத்தில் நல்லாண்டி நடித்துள்ளார். குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளார்கள். மணிகண்டன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் டிரெய்லர் 2019 டிசம்பரில் வெளியானது. புதிய டிரெய்லர் நாளை வெளியாகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், ட்விட்டரில் கூறியதாவது:

நான் பார்த்த படங்களிலேயே கடைசி விவசாயி மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ரிச்சர்ட் ஹார்வியுடன் இணைந்து இசையமைத்ததிலும் மணிகண்டன், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியதிலும் பெருமையடைகிறேன். மகத்தான இந்தப் படம் பற்றி நான் சொல்ல நிறைய இருக்கிறது என்றார். 

2019-ல் வெளியான டிரெய்லர்
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>