'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்துக்காக லண்டனில் வடிவேலு

 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு முதன்மை வேடத்தில் நடிக்கவிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை சுராஜ் எழுதி இயக்கவுள்ளார். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலுவுடன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லே, விக்னேஷ்காந்த், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். 

இதையும் படிக்க | கட் இல்லாமல் ஒரே டேக்கில் சிம்பு நடித்த மாநாடு காட்சி: 5 நிமிட விடியோவை வெளியிட்ட படக்குழு

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை பணிகளுக்காக நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். லண்டனில் வடிவேலுவுடன் இயக்குநர் சுராஜ் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>