நாளை(நவ.4) வெளியாகிறது ‘அண்ணாத்த’

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

இதையும் படிக்க | ”அவங்க என்ன மதிக்கல” – விஜய் டிவி தொடரில் இருந்து விலகியது குறித்து அதிர்ச்சியளித்த நடிகை

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தில்  ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினி காந்த்தின் தங்கையா கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  டி.இமான் இசையமைப்பில் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் ‘அண்ணாத்த’ தீபாவளியை முன்னிட்டு நாளை நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>