நாளை(நவ.4) வெளியாகிறது ‘எனிமி’

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘எனிமி’. சில மாதங்களாக வெளியீட்டிற்கு காத்திருந்த இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.4) திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிக்க | ‘எனக்கே தெரியாமல் நான் ஹீரோவாக நடிக்கும் படமா?’ : முதல் பார்வை போஸ்டரால் கௌதம் மேனன் அதிர்ச்சி

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

‘எனிமி’ படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசை சாம் சி.எஸ் .

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>