நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம். 

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. 

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

► பேரீச்சம்பழம்  மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. 

► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 

► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது. 

► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும். 

► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது. 

► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது.

► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

► சருமம் பொலிவடைய உதவுகிறது. 

► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>